உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் - ராணுவ சிப்பந்தி பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ சிப்பந்தி ஒருவர் உயிரிழந்தார்.
உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் - ராணுவ சிப்பந்தி பலி
Published on

ஜம்மு:

ஜம்மு ஜாஷ்மீர் மாநிலம் உரி செக்டார் பகுதியில் உள்ள சவுகாஸ் என்ற இடத்தில் இன்று காலை பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி மற்றும் சிறிய மோட்டார் குண்டுகளால் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

சிலமணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தில் சுமை தூக்குபவராக பணியாற்றி வந்த குர்ஷீத் அஹ்மது என்பவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com