காஷ்மீர்: மர்மமான துப்பாக்கி சூடு சம்பவத்தில் ராணுவ வீரர் பலி

ஜம்முவின் நக்ரோடா ராணுவ முகாமில் மர்மமான துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஜிதேந்தர் அகோஜா என்ற ரானுவ வீரர் உயிரிழந்தார்.
காஷ்மீர்: மர்மமான துப்பாக்கி சூடு சம்பவத்தில் ராணுவ வீரர் பலி
Published on

ஜம்மு:

ஜம்முவின் புறநகர் பகுதியான நக்ரோடா ராணுவ முகாமில் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டு பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அங்கு ஜிதேந்தர் அகோஜா (25), குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து, அவரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று டாக்டர்கள் சோதனையிட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மரணமடைந்த வீரர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்.

அவர் அருகே ஏகே ரக துப்பாக்கி கிடந்துள்ளது. இதனால் அவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஜிதேந்தர் சுட்டுக்கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com