பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ வீரர் கைது

மகாராஷ்டிரா மாநிலத்தில் 55 வயது பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற ராணுவ வீரர் கைது
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள ஆலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தா சுவாமி. ராணுவ வீரரான இவர் தனது மனைவியை பற்றி தரக்குறைவான வதந்திகளை பரப்பியதாக அதே கிராமத்தில் வசிக்கும் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் மீது ஆத்திரம் கொண்டார்.

இதையடுத்து, பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து கிராமத்து தெருக்களில் ஊர்வலமாக அழைத்து சென்றார். இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த ராணுவ வீரரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com