

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில் நாதன், தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம், மக்கள்நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன்ராஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 63பேர் போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 2 லட்சத்து 5ஆயிரத்து 273 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 81ஆயிரத்து 143 பேரும், பெண் வாக்காளர்கள் 91ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் 1 லட்சத்து73ஆயிரத்து 115 பேர் வாக்களித்துள்ளனர். இது 84.33 சதவீதம் ஆகும். 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் கரூர் தளவாபாளையம் குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதில், அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தநிலையில் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறை மிகச்சிறியதாக உள்ளது. இதனால் அங்கு வேட்பாளர்களின் முகவர்கள், ஊழியர்கள் யாரும் நிற்க முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை உள்ளது. எனவே பெரிய அறையோ அல்லது இடவசதிஉள்ள அறைகளையோ ஒதுக்கி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அன்பழகன் தெரிவித்தார்.