தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம்: கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. விண்ணப்பத்தை கீதாஜீவன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம்: கீதாஜீவன் வழங்கினார்
Published on

தூத்துக்குடி:

தி.மு.க.வின் 15-வது அமைப்பு தேர்தலுக்கு தயாராகும் வகையில், புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி கலைஞர் அரங்கில் நடைபெற்றது. விண்ணப்பத்தை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார்ரூபன், திருசிற்றம்பலம், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய கழக செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சின்னப் பாண்டியன், சின்னமாரிமுத்து, காசிவிசுவநாதன், முருகேசன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com