டெல்லியில் எடப்பாடி பழனிசாமியுடன் விலங்குகள் நல ஆர்வலர்கள் சந்திப்பு

டெல்லியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடியுடன் விலங்குகள் நல ஆர்வலர்கள் சந்தித்து பேசினார்கள். அனுமதியின்றி முதல்-அமைச்சரை சந்திக்க வந்ததால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமியுடன் விலங்குகள் நல ஆர்வலர்கள் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் உள்ள தனது அறையில் ஓய்வெடுத்தார். அப்போது 10 பெண்கள் உள்பட டெல்லியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர், முதல்-அமைச்சர் தங்கியிருந்த தளத்துக்கு திடீரென வந்தனர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் அவர்கள், ‘விலங்குகள் வதை தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து பேச வேண்டும்’ எனக்கூறினர். ஆனால் முன் அனுமதியின்றி முதல்-அமைச்சரை பார்க்க முடியாது என போலீசார் தடுத்தனர்.

இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த முதல்-அமைச்சர், விலங்குகள் நல ஆர்வலர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார். அதன்பேரில் 2 பெண்கள் முதல்-அமைச்சரை சந்தித்து பேசினார்கள்.

இது குறித்து அவர்கள் பின்னர் கூறுகையில், ‘திருச்சியில் சட்டவிரோதமாக இறைச்சி கூடத்தில் பசுமாடுகள் கொல்லப்படுவதாகவும், 160-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் அங்கு இறைச்சிக்காக வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினோம். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த பிறகும் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபற்றி முதல்-அமைச்சரிடம் புகார் செய்யவே நாங்கள் வந்தோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்’ என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com