ஆண்டிப்பட்டி அருகே முன்விரோதத்தில் பெண்களை தாக்கிய வியாபாரி கைது

ஆண்டிப்பட்டி அருகே முன் விரோதத்தில் பெண்களை தாக்கிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள பெருமாள் கோவில் பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி (58) என்பவருக்கும் மாடு விற்பதில் முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் பாண்டி மனைவி பார்வதி (36), மகள்கள் சுகன்யா (25), சரண்யா (26) ஆகிய 3 பேரையும் முத்துச்சாமி, அவரது மகன்கள் கருப்பசாமி (30), ராஜா (25), மூக்கம்மாள் ஆகிய 4 பேர்களும் சரமாரியாக தாக்கினர். இதில் பார்வதி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துச்சாமியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com