ஆண்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து தையல் தொழிலாளி பலி

ஆண்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து தையல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

போடி:

ஆண்டிப்பட்டி தாலுகா பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 23). இவர் போடி அடுத்த ரெங்கநாதபுரத்தில் உள்ள தனியார் ரெடிமேடு ஜவுளி நிறுவனத்தில் தங்கி தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 30-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கடித்து விட்டது.

இதையடுத்து அவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் ராஜபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com