ஆண்டிமடம் அருகே மது விற்றவர் கைது

ஆண்டிமடம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் வரதராஜன்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வரதராஜன்பேட்டை ஆரோக்கியபுரம் பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.

அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வரதராஜன்பேட்டை செங்கமேடு பகுதியை சேர்ந்த ஏரோணிராஜ்(வயது 31) என தெரியவந்தது. அவரிடம் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி ஏரோணிராஜை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com