

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராம மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபாபதி (வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் ராங்கியம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் இறந்து கிடந்துள்ளார்.
அவ்வழியே சென்றவர்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் விரைந்து வந்து சபாபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சபாபதி மீது மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.