வியாபாரிகள் குடும்பத்தினருடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அன்புமணி

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.
வியாபாரிகள் குடும்பத்தினருடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அன்புமணி
Published on

சென்னை:

பா.ம.க. சார்பில் ஆண்டு தோறும் சமத்துவ பொங்கல் பல இடங்களில் கொண்டாடப்படும்.

கோயம்பேடு வணிக வளாக கீரை மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் மலர், காய், கனி வியாபாரிகள் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் ஏற்பாடு செய்திருந்தன.

அதன்படி வியாபாரிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர்.

கரும்பு, மஞ்சள் கட்டப்பட்டு, வண்ண கோலங்கள் போட்டு கிராமத்து பாணியில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியதும் பொங்கலோ, பொங்கல் என்று கோ‌ஷமிட்டும், குரவை ஒலித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

கிராமத்து இசைகளும் இசைக்கப்பட்டன. பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.

நிகழ்ச்சிக்கு வை.கோவிந்த ராசு தலைமை தாங்கினார். கீரை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் வரவேற்றார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், வி.ஜெ.பாண்டியன், ரா.செ.வெங்கடேசன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், தொழிலதிபர் வெள்ளைப் பாண்டியன், பா.ம.க. நிர்வாகிகள் வக்கீல் பாலு, மு.ஜெயராமன் மற்றும் தாமோதரன், சயீத், ராம முத்துக்குமார், பக்தன், அனந்த கிருஷ்ணன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வியாபாரிகளின் சங்க அலுவலகத்தையும் அன்புமணி திறந்து வைத்தார். இன்று மாலையில் திருவல்லிக்கேணி சேக்தாவூத் தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் லோக் ஆயுக்தா மற்றும் சேவை பெறும் உரிமை சட்டம் பற்றி அன்புமணி பேசுகிறார். #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com