ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாஜக மாவட்ட துணை தலைவர் பயங்கரவாதிகளால் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். #MilitantsAttack #BJP
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள நவ்காமில் வீரிநாக் பகுதியில் வசித்தவர் குல் முகமது மிர். இவர் அனந்தநாக் மாவட்ட பா.ஜ.க. துணை தலைவராக இருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு குல் முகமது மிர் வீட்டுக்கு சென்ற பயங்கரவாதிகள் சிலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

பயங்கரவாதிகள் பா.ஜ.க. பிரமுகரை சுட்டுக் கொன்றதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #MilitantsAttack #BJP

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com