பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: ஓ.பி.எஸ்-க்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார் அமித்ஷா

பாஜக வேட்பாளருக்கு அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி ஆதரவு தெரிவித்ததற்கு, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.
பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: ஓ.பி.எஸ்-க்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார் அமித்ஷா
Published on

சென்னை:

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு பா.ஜ.க. ஆதரவு கோரியது.

இந்நிலையில், பாஜக வேட்பாளருக்கு அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று ஆதரவு தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், “பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். வேட்பாளர் குறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம். ராம்நாத் சிறந்த மாநிலங்களவை உறுப்பினராகவும், நிர்வாகியாகவும் இருந்திருப்பதால் அவரை ஆதரிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்” தெரிவித்தார் 

இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக பன்னீர் செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமித்ஷா நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுக அம்மா அணியும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com