அமித்ஷா, ஸ்மிருதி இராணி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு - சமஸ்கிருதத்தில் பதவியேற்றார் ஸ்மிருதி

குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோர் இன்று, பதவியேற்றுக் கொண்டனர். ஸ்மிருதி இராணி சமஸ்கிருதத்தில் பதவியேற்று கொண்டார்.
அமித்ஷா, ஸ்மிருதி இராணி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பு - சமஸ்கிருதத்தில் பதவியேற்றார் ஸ்மிருதி
Published on

புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களுக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இராணி, ராஜ்புத் ஆகியோர் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிட்டார்.

இத்தேர்தலில், அமித்ஷா, ஸ்மிருதி இராணி மற்றும் காங்கிரசின் அகமது படேல் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அமித்ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோர் இன்று, மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஸ்மிருதி இராணி சமஸ்கிருதத்தில் பதவியேற்றுக் கொண்டார். 

X

Maalai Malar
www.maalaimalar.com