அமைந்தகரையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

அமைந்தகரையில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைந்தகரையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
Published on

போரூர்:

அமைந்தகரை அரும்பாக்கம் டி.பி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலிசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்தநிலையில் அமைந்தகரையில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராவணன், அமைந்தகரையைச் சேர்ந்த கருணாகரன், ராஜேஷ், டி.பி சத்திரம் ரகு குமார் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் புளியந்தோப்பு பகுதியில் இருந்து கஞ்சாபொருட்களை வாங்கி வந்து அதை சிறிய பொட்டலங்கள் மூலம் கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com