அம்பத்தூர் அருகே மதுபானம் விற்ற 2 பேர் கைது

அம்பத்தூர் அருகே மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திரு.வி.க. நகர்:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி அம்பத்தூர் அடுத்த புதூர் பானுநகர் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக வந்த தகவலின்பேரில் அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

அதில் அங்குள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற பப்லு (வயது 31), சுரேஷ்(40) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com