அம்பராம்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

அம்பராம்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீரில் மூழ்கி பலி
நீரில் மூழ்கி பலி
Published on

கோவை:

கோவை ஆனைமலையை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 50). இவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக தண்ணீர் திறந்துவிடும் பணி செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூர் அம்பராம்பாளையம் ஆற்றின் அருகே உள்ள பம்பு அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ரத்தினசாமி திடீரென தவறி ஆற்றில் விழுந்தார். இதில் ரத்தினசாமி தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com