ஆலத்தூர் ஒன்றியத்தில் தி.மு.க. கிராம சபை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் தி.மு.க. கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஆலத்தூர் ஒன்றியத்தில் தி.மு.க. கிராம சபை கூட்டம்
Published on

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேனூர், கண்ணப்பாடி, நக்கசேலம், சிறுவயலூர், குரூர் ஆகிய ஊராட்சிகளில்  தி.மு.க. கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி செயலாளர்கள் தேனூர் திருமாவளவன், கண்ணப்பாடி கிருஷ்ணன், சிறுவயலூர் ராமராஜ், குரூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வேளர்சேரி மணிமாறன், மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு  பொதுமக்களிடம் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினர். மேலும் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com