ஆலங்குடி அருகே முயல் வேட்டையாடிய 6 பேர் கைது

ஆலங்குடி அருகே முயல் வேட்டையாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பள்ளத்துவிடுதி கிராமத்தில் வனப்பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக ஆலங்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பள்ளத்திவிடுதி வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு 6 பேர் கும்பல் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அந்த கும்பலை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் கொத்தமங்கலம் சிதம்பர விடுதி பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் வீரமணி (வயது 27), பரமேஸ்வரன் (18), திருமுருகன் (19), உத்தம நாதன் (36), புகழேந்தி (24) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த முயல் பிடிக்கும் வலை, சக்திவாய்ந்த பேட்டரிலைட் ஆகியவற்றை கைப்பற்றி திருவரங்குளம் வனச்சரகர் சபீர் அகமதுவிடம் ஆலங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com