சென்னையில் நாளை முழு ஊரடங்கு - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னையில் நாளை எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
Published on

சென்னை:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது வரும் இரு ஞாயிற்றுகிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுக்கும் அனுமதி அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் நாளை எந்த தளர்வும் கிடையாது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், சென்னையில் நாளை எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு பின்பற்றப்படும். நாளை ஜிம்பர் நுழைவுத் தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான ஹால் டிக்கெட்டை காட்டினால் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னையில் 6,421 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக 2,791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com