சசிகலாவை நீக்கும் நிலை வராது: ஏ.கே.போஸ் பேட்டி

சசிகலாவை நீக்கும் நிலை வராது: ஏ.கே.போஸ் பேட்டி

சசிகலாவை நீக்குவோம் என்ற நிலை எப்போதுமே வராது என்று அ.தி.மு.க. எம்.பி., எம்.எ.ல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் கூறினார்.
Published on

சென்னை:

அ.தி.மு.க. எம்.பி., எம்.எ.ல்.ஏ.க்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் சசிகலாவை நீக்குவது பற்றி ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. இது அரசியல் விமர்சகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் ஓ.பி.எஸ். அணியினர் இணைந்தனர். இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பி.எஸ். உள்பட அனைவரது முன்னிலையில் தான் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது பற்றி எந்த கருத்தும் இடம் பெறவில்லை.

கூட்டத்தில் கலந்து கொண்ட திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் கூறும் போது, சசிகலாவை நீக்குவோம் என்ற நிலை எப்போதுமே வராது என்றார்.

ஏ.கே.போஸ், தினகரன் அணிக்கு ஆதரவாகவும் இருந்தார். அதன் பிறகு எடப்பாடி அணிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com