ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவராக அஜோய்குமார் நியமனம்: காங்கிரஸ் அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அஜோய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவராக அஜோய்குமார் நியமனம்: காங்கிரஸ் அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அஜோய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் மற்றும் சட்டசபை தலைவர் ஆகியோரை நியமனம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அஜோய்குமாரும், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தலைவராக ஆலம்கீர் ஆலமும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ளார்.

மேலும், ராமா கால்கோ, அசோக் சவுத்ரி, கமலேஷ் மாதோ, சுல்தான் அகமது மற்றும் பீம்குமார் ஆகியோரை மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் குழுவினரை அமைத்து ஒப்புதல் அளித்துள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com