டெல்லியில் வன்முறை- அஜித் தோவால் நேரில் ஆய்வு

வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அஜித் தோவால்
அஜித் தோவால்
Published on

புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்ப போதிய நடவடிக்கைகளை எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.  வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவிட்ட நிலையில், டெல்லி கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீலம்பூர், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து  சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி கவர்னர் அனில் பைஜால், போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com