சரக்கு வேன் மீது விமானம் மோதியது - டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை, சரக்கு வேன் மீது மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சரக்கு வேன் மீது விமானம் மோதியது - டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு
Published on

புதுடெல்லி:

துபாயில் இருந்து டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று இரவு 8 மணிக்கு இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் 133 பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில், விமான நிலையத்தில் சரக்கு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது வந்திறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கை ஒன்று அங்கிருந்த சரக்கு வேன் மீது திடீரென மோதியது. இதனால் விமானம் குலுங்கியதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக, விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், விமானத்தின் இறக்கை சரக்கு வேன் மீது மோதியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர் என தெரிவித்தனர். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com