எய்ட்ஸ் நோய்க்கு 2016-ம் ஆண்டில் 10 லட்சம் பேர் உயிரிழப்பு: ஐ.நா. தகவல்
வாஷிங்டன்:
உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய் ஏராளமானோரை தாக்கி உயிர்ப்பலி வாங்கி கொண்டு இருக்கிறது. இந்த நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வந்த போதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஐ.நா சபை ஆண்டுதோறும் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன் படி சென்ற வருடம் எய்ட்ஸ் நோயால் 10 லட்சம் பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது 2005ஆம் ஆண்டின் பலி எண்ணிக்கையில் பாதி ஆகும்.
மேலும் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை எய்ட்ஸ் அறிவியல் மாநாடு தொடங்க உள்ள நிலையில், இந்த புள்ளிவிவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

