கே.சி.பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
கே.சி.பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
Published on

சென்னை:

அ.தி.மு.க.வின் தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளதாவது:

கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட காரணத்தாலும் திருப்பூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த கே.சி.பழனிசாமி கட்சி உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.

எனவே, கட்சி உறுப்பினர்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com