குஜராத் வக்ப் வாரிய உறுப்பினராக அகமது பட்டேல் நியமனம்

குஜராத் மாநில வக்ப் வாரியத்தின் புதிய உறுப்பினர்களாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் உள்பட பத்து பேர் இன்று நியமிக்கப்பட்டனர்.
குஜராத் வக்ப் வாரிய உறுப்பினராக அகமது பட்டேல் நியமனம்
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநில வக்ப் வாரியத்தின் புதிய உறுப்பினர்களாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் உள்பட பத்து பேர் இன்று நியமிக்கப்பட்டனர்.

நாட்டெங்கிலும் உள்ள மசூதிகள், தர்காக்களுக்கு சொந்தமான சொத்துகளை நிர்வகிக்கவும், நற்பணிகளை கண்காணிக்கவும் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசின் சார்பில் வக்ப் வாரியங்கள் இயங்கி வருகின்றன.

அவ்வகையில், குஜராத் மாநில வக்ப் வாரியத்துக்கான பத்து புதிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அகமது பட்டேல், வான்கனர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. முஹம்மது ஜாவெத் பிர்ஸாடா மற்றும் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய உறுப்பினர்கள் பத்துபேரும் தங்களுக்குள் ஒருவரை வக்ப் வாரிய தலைவராக தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com