ஆப்கான் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பன்னாட்டு ராணுவப் படைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கான் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு
Published on

ஆப்கானிஸ்தானில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வன்முறையும், தீவிரவாத சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அங்குள்ள தீவிரவாதிகளை ஒடுக்க உள்நாட்டு ராணுவத்துடன் ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டுப் படைகளும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டிய கந்தஹர் மாகாணத்திற்கு உட்பட்ட தமான் பகுதியில் நேட்டோ படையினர் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் சென்ற வாகனங்களை நோக்கி தற்கொலைப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

உடலில் குண்டுகளை கட்டிவந்த தீவிரவாதி வாகன வரிசைக்கு குறுக்கே தான் ஓட்டு வந்த வாகனத்தை எடுத்து வந்து சரியான நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த தாக்குதலில் நேட்டோ படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகவலை பெனட்கன் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடற்படை தளபதி ஜெஃப் டேவிஸ் மரண அறிவிப்பை வாஷிங்டனில் அறிவித்தார். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்த மற்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com