நெகமம் அருகே அழகிகளை வைத்து விபசாரம்: கணவன்-மனைவி கைது

நெகமம் அருகே அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அனுப்பர்பாளையத்தில் ஒரு தம்பதி வீடு வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தனர். வெளியாட்கள் அடிக்கடி வந்து செல்வதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிததனர்.

உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அழகிகளை வைத்து விபசாரம் செய்த புரோக்கர் செல்வராஜ் (வயது 32), அவரது மனைவி ராஜேஸ்வரி (28) ஆகியோரை கைது செய்தனர்.

விபசாரத்துக்கு தயாராக இருந்த அழகியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய செல்வராஜ், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள விபசாரம் நடந்த வீட்டு உரிமையாளர் அருள் ஜோதி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com