நாளை மறுநாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னையில் நாளை மறுநாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு
Published on

அ.தி.மு.க.வின் பிரதான அணிகளான ஓ.பி.எஸ். அணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி ஆகியவை இணைந்து செயல்படத் தொடங்கி உள்ளன. ஆனால், இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கட்சியில் இருந்து தினகரன் மற்றும் சசிகலாவை நீக்கப்போவதாக எடப்பாடி தரப்பினர் கூறுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com