துடைப்பம் பிடித்து, தூய்மைப் பணியில் களமிறங்கிய உ.பி. முதல்வர்

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று துடைப்பம் பிடித்து தெருக்களை பெருக்கி சுத்தம் செய்தார்.
துடைப்பம் பிடித்து, தூய்மைப் பணியில் களமிறங்கிய உ.பி. முதல்வர்
Published on

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.க. சார்பில் அம்மாநில முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்றுள்ளார். விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி உள்பட தனது அரசின் சார்பில் பல்வேறு அதிரடி திட்டங்களை இவர் நிறைவேற்றி வருகிறார். புதிய அறிவிப்புகளும் வெளியிடுகிறார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான பலூ அடார் பகுதிக்கு இன்று காலை தனது சகமந்திரிகளுடன் காரில் வந்த முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் இன்று துடைப்பம் பிடித்து அங்குள்ள தெருக்களை பெருக்கி சுத்தம் செய்தார்.

அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை சுத்தமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். இந்தியாவின் தூய்மையான முதல் நூறு நகரங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த நிலையை மாற்றி மாநிலத்தின் தலைநகரான லக்னோவையும் தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என அப்பகுதியில் இருந்த பொதுமக்களை அவர் கேட்டு கொண்டார்.

இந்த பட்டியல் தங்களது ஆட்சி அமைவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இடம்பெற்றதாகவும், அடுத்த கணக்கெடுப்புக்குள் லக்னோவை மிகவும் தூய்மையான நகரமாக மாற்றி காட்டுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லக்னோ நகரம் இவ்வளவு அசுத்தமாக இருப்பது ஏன்? என்று அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்த யோகி ஆதித்யாநாத், நகருக்கு உட்பட்ட அமைத்து வார்டுகளையும் தூய்மையாக வைத்துகொள்ளும்படி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com