புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவியேற்றார்

நஜீம் ஜைதி ஓய்வு பெற்றதை அடுத்து, நாட்டின் 21-வது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவியேற்றார்
Published on

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்த நஜீம் ஜைதிக்கு 65 வயது ஆனதால், அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அச்சல் குமார் ஜோதி, புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

நஜீம் ஜைதி இன்று ஓய்வு பெற்றதும், 21-வது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று பதவியேற்றுக் கொண்டார். 64 வயதாகும் இவர், ஓராண்டு காலம் பதவியில் தொடர்வார்.

X

Maalai Malar
www.maalaimalar.com