தாராபுரம் அருகே போலீஸ்காரர் மனைவி விபத்தில் பலி

தாராபுரம் அருகே போலீஸ்காரர் மனைவி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் அருகே போலீஸ்காரர் மனைவி விபத்தில் பலி
Published on

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மணி(32). இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சரண்யா(29). இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று சரண்யா உப்புத்துறைபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

ரெட்டவலசு பிரிவில் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com