ரெயிலில் ஏ.சி. வகுப்பு பயணிகளுக்கு புதிய போர்வை: ரெயில்வே நிர்வாகம் முடிவு

ரெயிலில் ஏ.சி. வகுப்பு பயணிகளுக்கு பழைய போர்வைக்கு பதிலாக புதிய போர்வை வழங்க ரெயில்வே நிர்வாகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது.
ரெயிலில் ஏ.சி. வகுப்பு பயணிகளுக்கு புதிய போர்வை: ரெயில்வே நிர்வாகம் முடிவு
Published on

ரெயிலில் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்கிற பயணிகளுக்கு ஒரு செட் விரிப்புகள், துண்டு, தலையணை, போர்வை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த போர்வைகள் 6 மாதத்துக்கு ஒரு முறை கூட சலவை செய்யப்படுவது இல்லை என்று தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயணிகளும் புகார் செய்கின்றனர்.

இந்த நிலையில், பயணிகளுக்கு பழைய போர்வைக்கு பதிலாக புதிய போர்வை வழங்க ரெயில்வே நிர்வாகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. இந்த போர்வைகள் எடை குறைவானதாக, பயன்படுத்துவதற்கும், சலவை செய்வதற்கும் எளிதானதாக இருக்கும். இப்படிப்பட்ட போர்வையை வடிவமைத்து தருமாறு ‘நிப்ட்’ என்னும் தேசிய ஆடைகள் வடிவமைப்பு கல்லூரியிடம் ரெயில்வே நிர்வாகம் கேட்டுள்ளது. சோதனை ரீதியில், மெல்லிய போர்வைகள் மத்திய மண்டல ரெயில்களில் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com