கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளியில் புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது
Published on

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேப்பனப்பள்ளி கவுண்டர் தெருவை சேர்ந்த கபர் (வயது 65), கொங்கனப்பள்ளி சாலையை சேர்ந்த சீனிவாசகவுடு (70), ஜாவித்(38), இனியாஸ் பாஷா (52), தொட்டகணவாய் சிவபிரசாத் (40), ராமர்கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்பாபு(40), முஸ்தபா (35) ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதே போல கே.ஆர்.பி. அணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது கே.ஆர்.பி. அணை பகுதியை சேர்ந்த ராமசாமி (51), பெரியமுத்தூரை சேர்ந்த ராமன் (36) ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com