

நியூயார்க்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த மாதம் தாக்கிய ஹார்வே புயலால் ஹுஸ்ட்ன் நகருக்கு உட்பட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 14 ஆண்டுகால வரலாறு காணாத இந்த பெரும் புயலால் டெக்சாஸ் மாநிலம் சின்னாபின்னமாகிப் போனது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில் ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில கவர்னர் கிரேக் அபாட் தெரிவித்துள்ளார்.