திருவண்ணாமலை அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பேர் வாந்தி மயக்கம்

திருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
திருவண்ணாமலை அருகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பேர் வாந்தி மயக்கம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் மங்களம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் விவசாயி. இவரது மனைவி பு‌ஷ்பலதா. இவர்களுக்கு வெற்றிவேல், லோகேஷ் 2 மகன்கள் உள்ளனர். புஷ்பலதா நேற்று இரவு வழக்கம் போல் உணவு சமைத்து தனது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு உணவு பரிமாறி விட்டு கடைசியாக புஷ்பலதா உணவை சாப்பிட்டார்.

அப்போது சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது வெற்றிவேல் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து 108ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து மங்களம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com