பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 7 கடற்படை வீரர்கள் கைது

பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உளவு பார்த்ததாக 7 கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

அமராவதி:

ஆந்திர போலீஸ் உளவுப்பிரிவு, மத்திய உளவுப்பிரிவு மற்றும் கடற்படை உளவுப்பிரிவு அதிகாரிகள் ஆந்திர மாநிலத்தில் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உளவு பார்த்ததாக 7 கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் ஹவாலா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் நாட்டின் பல பகுதிகளில் கைதானதாக தெரிகிறது.

இதுதொடர்பாக ஆந்திர போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சந்தேகப்படும் மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தகவல் ஆந்திர போலீசார் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com