பாகிஸ்தான்: தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் - 7 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததாகவும், இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த தேவாலயம்
தாக்குதல் நடந்த தேவாலயம்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் பெத்தேல் நினைவு தேவாலயம் உள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் கீழ் செயல்படும் இந்த தேவாலயத்தில் இன்று பிராத்தனைக்காக சுமார் 400-க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். பொதுவாகவே இந்த பகுதி உயர்மட்ட கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதியாகும்.

இந்நிலையில், இன்று முற்பகலில் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு இரு தீவிரவாதிகள் தேவாலயத்தை நோக்கி முன்னேறியுள்ளனர். ஆனால், அவர்களை முன்னதாகவே தடுத்த போலீசார் தாக்க தொடங்கினர். இதனையடுத்து, தேவாலயத்தின் வாசலில் ஒரு தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க வைத்தான். மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி தாக்கினான்.

துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய தீவிரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த கோர தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பலூச் மாகாண ஐ.ஜி மொஸ்ஸாம் அன்சாரி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com