12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் - 66 சதவீதம் வாக்குப்பதிவு

பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் இன்று 66 சதவீதம் வாக்குகள் பதிவாகின என அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #ParliamentElections
12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் -  66 சதவீதம் வாக்குப்பதிவு
Published on

முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், அசாம் 76.22%, பீகார் 62.38%, ஜம்மு காஷ்மீர் 45.5%, கர்நாடகம் 67.67%, மகாராஷ்டிரா 61.22%, மணிப்பூர் 67.15%, ஒடிசா 57.97%, தமிழ்நாடு 66.36%, உத்தரப்பிரதேசம் 66.06%, மேற்கு வங்காளம் 76.42%, சத்தீஸ்கர் 71.40%, புதுச்சேரி 76.19% வாக்குகள் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. #LokSabhaElections2019 #ParliamentElections

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com