‘இர்மா' புயல் பாதிப்பில் சிக்கித்தவித்த 60 இந்தியர்கள் கரீபியன் தீவில் பத்திரமாக மீட்பு

கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் தீவிரமாக வீசி வரும் ‘இர்மா' புயலில் சிக்கிய 60 இந்தியர்கள் செயிண்ட் மாட்ரின் தீவிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
‘இர்மா' புயல் பாதிப்பில் சிக்கித்தவித்த 60 இந்தியர்கள் கரீபியன் தீவில் பத்திரமாக மீட்பு
Published on

வாஷிங்டன்:

அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளை தாக்கி துவம்சம் செய்தது. இதை தொடர்ந்து, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். புளோரிடாவை தொடர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் இர்மா புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கரீபியன் கடலில் உள்ள செயிண்ட் மார்டின் தீவுப்பகுதியில் இர்மா புயல் பாதிப்பில் சிக்கித்தவித்த 60 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சுற்றுலா தீவான செயிண்ட் மார்டின், அமெரிக்காவுக்கு செல்ல இருப்பவர்கள்

விமானம் மாறும் இடமாகும்.

இந்த விமான நிலையத்தில் அமெரிக்காவின் உள்துறை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. தீவில் குவிந்திருந்த 1200 பேரை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 5000 அமெரிக்கர்கள் அங்கு சிக்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com