பஞ்சாப்பில் 5 வயது சிறுமியை கற்பழித்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

பஞ்சாப் மாநிலம் டசுயா நகரத்தில் 5 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பஞ்சாப்பில் 5 வயது சிறுமியை கற்பழித்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Published on

காந்திநகர்:

பஞ்சாப் மாநிலம் டசுயா நகரில் நேற்று இரவு 5 வய்து சிறுமி காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே சிறுமி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மிகவும் மோசமான நிலையில் இருந்த சிறுமியை, டசுயா சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ராஜேஷ் பக்காரி, சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சண்டிகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் 5 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com