அரியானாவில் பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலி

அரியானா மாநிலத்தில் ரேவாரி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அப்பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுவன் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவில் பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் பலி
Published on

சண்டிகர்:

அரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தாரன் என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இன்று மாலை பள்ளி முடிவடைந்த பின்னர் மாணவர்கள் பள்ளி பேருந்தில் ஏறுவதற்காக வந்தனர். அப்போது, ஒரு பேருந்து பின்னோக்கி செல்லும் போது, தவறுதலாக ஐந்து வயது சிறுவன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் கொண்டுசெல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி வளாகத்திலேயே 5 வயது மாணவன் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com