

லக்னோ:
பல வட மாநிலங்களில் மணமக்களை வரவேற்கும் விதமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் வழக்கம் இருக்கிறது. இந்த நிகழ்வின் போது உயிர்பலி ஏற்படுகிறது என அரசு இதற்கு தடை விதித்துள்ளது.
இருப்பினும், பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக இது போன்ற வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் படாவுன் மாவட்டத்தில் தோபெர் கேபா என்ற கிராமத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
ஆனால், குண்டு குறி தவறியதால் வீட்டின் கூரையை தாக்கியது. இதனையடுத்து, கூரை பலமாக சரிந்து விழுந்தது. இந்த விபத்தில்
திருமண வீட்டிற்கு வந்திருந்த 45 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.