சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சியாச்சினில் ரோந்து பணியில் ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)
சியாச்சினில் ரோந்து பணியில் ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)
Published on

ஸ்ரீநகர்:

உலகின் உயரமான போர்க்களம் என்று சியாச்சின் பகுதி வர்ணிக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த பனி படர்ந்த மலைப்பகுதி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் முகாம் அமைத்து இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது ஜம்மு காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிப்பொழிவின் அளவு அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், சியாச்சின் ராணுவ வீரர்கள் முகாம் அருகே இன்று திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 3.30 மணியளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் உள்பட 8 பேர் சிக்கினர். இதையடுத்து பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.

இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 8 பேரையும் மீட்ட ராணுவத்தினர் ஹெலிகாப்டர் உதவியுடன் உடனடியாக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், கடுமையான குளிர் காரணமாக 4 ராணுவ வீரர்கள் மற்றும் 2 சுமைதூக்குவோர் மொத்தம் 6 பேர் உயிரிழந்துவிட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com