பெரியகுளம் அருகே பெண்ணை துன்புறுத்திய 4 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணை துன்புறுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு (கோப்பு படம்)
வழக்கு (கோப்பு படம்)
Published on

தேனி:

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். ராணுவவீரர். இவருக்கும் வெங்கிட்டம்மாள் (வயது 27) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடை பெற்றது. திருமணமான 1 மாதத்தில் உதயகுமார் வேலைக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவரது கணவர் வீட்டார் வெங்கிட்டம்மாளை துன்புறுத்தி வந்துள்ளனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் புகார் அளித்தார்.

எஸ்.பி. உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் வெங்கிட்டம் மாளை துன்புறுத்தியதாக கணவர் உதயகுமார் அவரது தந்தை ராமசாமி, தாய் ராமுத்தாய் மற்றும் தமிழ்செல்வி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com