திருப்பூரில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பறித்து சென்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

திருப்பூர்:

திருப்பூர் தென்னம் பாளையம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது மனைவி கலாவதி (வயது 57). இவர் ஆர்.வி.இ. லே அவுட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

இந்நிலையில் கலாவதியை பார்த்த அவர்கள் மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்துக்கொண்டனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் திடீரென கலாவதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்தார்.

உடனே கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பிச்சென்றனார். இதில் நிலைகுழைந்த கலாவதி கீழே விழுந்தார். தொடர்ந்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டனர். இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்கவில்லை. இது குறித்து அவர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று தப்பியோடிய வாலிபர்களை தேடி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com