

கோவை:
கோவை மாவட்டம் வெள்ளலூர் பிரிவு அருகே கேரளாவிலிருந்து வந்த கார் ஒன்று லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபாமக பலியானார்கள். மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.