சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் 4 பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் பகுதியில் நக்சல்களுடன் நடைபெற்ற சண்டையில் 4 பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழந்தனர். #ChhattisgarhEncounter
சத்தீஸ்கரில் நக்சல்களுடனான சண்டையில் 4 பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழப்பு
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இதில் நக்சல்கள் தாக்கியதில் 4 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழந்தனர் என்றும், மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என  போலீசார் தெரிவித்தனர். #ChhattisgarhEncounter

X

Maalai Malar
www.maalaimalar.com