

பனாஜி:
நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு இந்தியாவின் 103 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக நான்கு பேரை கோவா போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்களில் இருவரை வெர்நா போலீசார் கைது செய்தனர் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் இருவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் ஏமாற்றுதல், மற்றவர்களின் உரிமையை பறித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருந்து 2000 பேர் நீட் தேர்வை எழுதிய நிலையில் முந்தை ஆண்டுகளை விட இம்முறை அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய எதையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அதிகப்படியான சோதனை நடவடிக்கைய தேர்வு எழுதும் மையங்களில் பரபரப்பாக காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த சோதனையால் தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனை செய்பவர்களுக்கும் இடயே பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது.